துபாய்: துபாயில் நடந்த தொழிலாளர் நல விழாவில் நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு அனைவரையும் தனது மிமிக்ரியால் அசத்தினார். துபாய் ஈடிஏ எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் 20.03.2014 அன்று மாலை நடைபெற்ற தொழிலாளர் நல விழாவில் நடிகர் தாமு பங்கேற்று தொழிலாளர்களை மகிழ்வித்தார். நிகழ்ச்சிக்கு ஈடிஏ எம்.பி.எம். முதுநிலை பொது மேலாளர் ஹமீது தலைமை வகித்தார். அவர் தனது உரையில் தீய பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.





