Recent Post

லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்தப் படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’!



தமிழில் 35-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து புகழ் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழில் ‘ஆரோகணம்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அந்த திரைப்படம் 2012-ல் வெளியாகி அனைத்து திரைப்பட விழாக்களிலும், பல்வேறு அமைப்பினரும் பாராட்டும் வண்ணம் வெற்றி பெற்றது. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது இயக்குனர் பயணத்தில் அடுத்த முயற்சிக்கான பணிகளை துவக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்று பெயர் வைத்துள்ளார். படத்தை ‘ஏ.வி.ஏ புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.வி.அனூப் தயாரிக்கிறார்.
மேலும் படத்திற்கான நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)