தெலுங்கு சினிமாவில் முன்னணி இளவட்ட ஹீரோக்களில் நானியும் குறிப்பிடத்தக்கவர். இவர் தமிழில் கவுதம்மேனன் தயாரித்த வெப்பம் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் நாயகனாக நடித்தார். தெலுங்கைப்போலவே தமிழிலும் அப்படம் வெற்றி பெற்றது.
அதனால், அதன்பிறகு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ஹீரோவாக நடிக்க விரும்பிய நானி, தமிழில் நடிக்க தீவிரமாக கதை கேட்டு வந்தார். அப்போதுதான் ஆஹா கல்யாணம் என்ற படம் கிடைத்தது. அதில் அதிக நம்பிக்கையுடன் நடித்தார். ஆனால், அப்படம் தோல்வியடைந்து நானியின் தமிழ் சினிமா கனவை கலைத்து விட்டது.
மேலும், தெலுங்கிலும் இப்படம் தோற்று விட்டதால், நானியின் மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளதாம். அதனால் கவலையில் இருக்கும் அவர், இனி தெலுங்கில் முழுக்கவனத்தையும் செலுத்த திட்டமிட்டுள்ளாராம். தேவையில்லாமல் தமிழில் ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர், ஆஹா கல்யாணம் படத்திற்கு பிறகு கதை கேட்க இருந்த சில டைரக்டர்களிடமும் இப்போதைக்கு தமிழ் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.