Recent Post

பிந்து மாதவியை ஏமாற்றிய ஹீரோக்கள்!



தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வந்தவர் பிந்து மாதவி. ஆனால், தமிழில் அறிமுகமான கழுகு படத்தில் ஹோம்லியாக நடித்து ஒரு இமேஜை உருவாக்கிக்கொண்டார். ஆனால் அதுவே அவரை பெரிய ரேஞ்சுக்கு வளர விடாமல செய்து விட்டதாம். கூடவே கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா போன்ற மினிமம் பட்ஜெட் படங்களால் அவரால் மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க முடியாத நிலை.

அதனால் தற்போது அவரைத்தேடி வருவதெல்லாம் வில்லேஜ் மற்றும் மினிமம் பட்ஜெட் படங்கள்தான். இதனால் குடும்ப இமேஜை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லி, எனது வளர்ச்சிக்கு நானே முட்டுக்கட்டை போட்டு விட்டேனே என்று புலம்பிக்கொண்டு திரிகிறார் பிந்துமாதவி. மேலும், அவருடன் ஜோடி போட்ட சில ஹீரோக்கள், மெகா படங்களில் நடிக்கும்போது தாங்கள் சிபாரிசு செய்வதாக சொன்னவர்கள் இப்போது, பிந்துவை கிட்டத்தட்ட மறந்தே விட்டார்களாம்.

இதனால் மேற்படி ஹீரோக்களை வசைபாடிக்கொண்டு திரியும் பிந்துமாதவி, தற்போது அருள்நிதியுடன் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கலக்குறே மாப்ளே ஆகிய படங்களில் நடித்து வருபவர், அடுத்து படுகவர்ச்சி நடிகையாக பூதாகரமாக வெடித்து சிதறப்போகிறாராம். அதனால், சில மெகாப்பட கம்பெனிகளுக்கு ரகசிய விசிட் அடிக்கும் பிந்துமாதவி, அப்போது கவர்ச்சியான கெட்டப்பில் காட்சி கொடுத்து அவர்களையும் திக்குமுக்காட வைத்து வருகிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)