Recent Post

யாமிருக்க பயமே முன்னோட்டம்





ஆர்.எஸ்.இன்போ டெயின் மென்ட் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரிக்கும் படம் ‘யாமிருக்க பயமே’. இதில் நாயகனாக கிருஷ்ணா, நாயகியாக ரூபா நடிக்கின்றனர். கருணா, ஓவியா நளினிகாந்த், மயில்சாமி, ஆதவ் கண்ணதாசன், அனஸ்வரா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை டீகே இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

காமெடி திரில்லர் படமாக தயாராகிறது. கிருஷ்ணா ஏமாற்று பேர்வழி. அவருக்கு ஒரு பங்களா வீடு சொத்து வருகிறது. கூட்டாளிகளுடன் அதை புதுப்பித்து அனுபவிக்க முயலும் போது சிக்கலில் மாட்டுகிறார். பேராசை எப்படி பயமாக மாறுகிறது. அதில் இருந்து மீண்டார்களா என்பது கதை.

பங்களாவும் முக்கிய கேரக்டராக வருகிறது. நைனிடாலில் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. நான்கு பாடல்கள் உள்ளன. புலிகள் நிறைந்த குளிரான பகுதியில் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஒளிப்பதிவு: ராமி, இசை: எஸ்.என்.பிரசாத், எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத், பாடல்: ஸ்ரீகாந்த்வர்தன், ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)