
ஐ.என்.பி. மூவிஸ் மற்றும் ரைட் வியூ சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘குபேரராசி’. இதில் நாயகனாக ரோஸன், நாயகியாக அபிராமி அறிமுகமாகின்றனர். பிஜாய், மனோஜ் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் கருணாஸ் நடித்த சந்தமாமா படத்தை டைரக்டு செய்தவர்.
இரு நண்பர்களுக்குள் ஒரு போட்டி நடக்கிறது. விளையாட்டாக துவங்கும் அப்போட்டியின் இறுதியில் ஒருவன் குபேரனாகிறான். மற்றவன் குசேலனாகிறான். இதை மையமாக வைத்து ஆக்ஷன், காதல், காமெடியுடன் தயாராகிறது.
படத்தில் நாயகனாக வரும் ரோஷன், மலையாளத்தில் ஹிட்டான திரிஷ்யம் படத்தில் நடித்தவர். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
சென்னை, கோவை, திருச்சி, கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. குலுமனாலியில் பாடல் காட்சி படமாகிறது.
வசனம்: தமிழ்மணவாளன், இசை: கணேஷ்ராக வேந்திரா, ஒளிப்பதிவு: கே.தில்ராஜ், எடிட்டிங்: சுரேஷ்சுர்ஸ், நடனம்: ஸ்ரீதர், தயாரிப்பு மதுகலம் பாயில்.