கழுகு கிருஷ்ணா நடித்து வரும் படம் வானவராயன் வல்லவராயன். இந்த படத்தில் மும்பை நடிகை மோனல் கஜ்ஜார் நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து விமல் நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கயிருக்கிறார். தமிழுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கிலும் சில படங்களில் நடித்த மோனல், தெலுங்கில் பிசியாக இருந்த நேரத்தில், அனுஷ்காவின் ஓரிரு வாய்ப்புகளைகூட தட்டிப்பறித்திருக்கிறார். அதனால் தமிழிலும் போட்டிக்கோதாவில் குதிக்கத்தான் வந்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால் இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார் மோனல். இருப்பினும் தொடர்ந்து சென்னையிலேயே முகாமிட்டு புதிய படங்களுக்கான வேட்டையிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம், திடீரென மோனலுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த செய்தி கோலிவுட்டில் பரவியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று ஆளாலுக்கு கண் காது வைத்து கதை சொல்லிக்கொண்டிருந்தனர்.
