Recent Post

’கோலி சோடா’ இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த விக்ரம்?




விக்ரம் நடிக்கும் புதிய படத்தை ‘கோலிசோடா’ இயக்குனர் விஜய் மில்டன் இயக்கவிருக்கிறார்.
விக்ரம் தற்போது “ஐ” படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை வரும் கோடை விடுமுறையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து விக்ரம், தரணி இயக்கத்தில் ‘ராஸ்கல்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்தப் படத்துடன் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி உள்ளது. ‘கோலிசோடா’வை பாராட்டிய விக்ரமை நட்பு ரீதியாக சந்திக்கப்போன விஜய்மில்டன் அவரிடம் ஒரு கதையை சொன்னாராம்.
அது விக்ரமுக்கு பிடித்துப்போகவே உடனே கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம் விக்ரம். இந்தப் படத்திற்கு ‘இடம் மாறி இறங்கி யவன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)