தமிழக அரசியலும், சினிமாவும் நகமும் சதையும் மாதிரி ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. தமிழக முதல்வர் ஜெயலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும், தி.மு.க தலைவர் கருணாநிதியும் திரைத்துறையை சார்ந்தவர்களே. வருகிற லோக்சபா தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.கவுக்காக நடிகர்கள் ராமராஜன், செந்தில், சிங்கமுத்து, ஆனந்தராஜ், தியாகு, குண்டு கல்யாணம், நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, பாத்திமா பாபு, குயிலி, விந்தியா, டி.கே.கலா, டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி, பாடலாசிரியர் முத்துலிங்கம், இயக்குனர் பி.சி.அன்பழகன், பாடகி அனிதா குப்புசாமி ஆகியோர் பிரச்சாரம் செய்கிறார்கள்.
தி.மு.கவில் நடிகை குஷ்பு, நடிகர் நெப்போலியன், வாகை சந்திரசேகர் ஆகியோர் பிரச்சாரம் செய்கிறார்கள். சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் அ.தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்கிறார்கள். கார்த்திக் அவரின் நாடாளும் மக்கள் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார். டி.ராஜேந்தர் பிரச்சாரத்திற்கு விரைவில் கிளம்புகிறார். ஆனால் எந்த கட்சிக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்வது என்று அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. நடிகை ரோஜா ஆந்திரா பக்கம் பிரச்சாரத்திற்கு சென்று விடுவார்.
இவர்கள் அனைவரும் அரசியலில் நேரடியாக இருப்பவர்கள். அவர்கள் சார்ந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறவர்கள். வேறு சில நடிகர், நடிகைகள், பிரச்சாரம் செய்ய கணிசமான பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்குவார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் வடிவேலு தி.மு.கவுக்காவும், விஜயகாந்தை எதிர்த்தும் அப்படித்தான் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு அ.தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்தனர்.
இந்த தேர்தலில் விஜயகாந்த் தி.மு.க அணியில் சேர்ந்தால் அ.தி.மு.கவுக்காக பிரச்சாரத்தில் குதிக்க வடிவேலு தயாராக இருந்தார். அவர் பா.ஜ.க அணிக்கு சென்று விட்டதால் தனது பிரச்சார திட்டத்தை கைவிட்டு விடுவார் என்று தெரிகிறது. என்றாலும வடிவேலுவுக்கு கணிசமான தொகை கொடுத்து பிரச்சாரத்திற்கு இழுக்க அ.தி.மு.க தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க நரேந்திர மோடியின் மாநிலத்தை சேர்ந்த நடிகை நமீதாவை பிரச்சாரத்திற்கு கொண்டு வரலாம். இதுதவிர தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் சினேகா, சங்கீதா, சிம்ரன், சொர்ணமால்யா, மும்தாஜ் போன்ற நடிகைகளை பணம் கொடுத்து பிரச்சாரத்துக்கு அழைக்க தி.மு.க, அதிமுக கட்சிகள் முயற்சி எடுத்து வருகிறது. யார் யார் களத்தில் இறங்குவார்கள் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.