Recent Post

வல்லினம்



இந்நாட்களில் படத்தின் தலைப்புகள் அவர்கள் இஷ்டத்துக்கு வைத்துகொள்கிறார்கள் அனால் கதைக்கு ஒத்த ஒரு தலைப்பை வைத்து வெளிவந்துள்ள படம் தான் வல்லினம். பொதுவாக விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்கள் விறுவிறுப்பாகவும் இளைஞகர்களை கவரும் வன்னனமாகவும் இருக்கும். இந்த படம் இதை நன்கு பூர்த்திசெய்துள்ளது.
நகுல் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘ஆஸ்கர் பிலிம்ஸ்’பெரிய அளவு முதலீடு செய்து  எடுத்துள்ளது. படத்தில் நாயகியாக மிருதுளா நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ஜெயபிரகாஷ், அம்ஜத் கான், அதுல் குல்கர்னி, ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை தமன். ஒளிப்பதிவு பாஸ்கரன். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ‘ஈரம்’ அறிவழகன். ஈரம் படம் வெற்றியை தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வல்லினம் வெளியாகியுள்ளது.
திருச்சியில் கல்லூரியில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும்  நகுல்  மற்றும்  கிருஷ்ணா  அவர்கள் கல்லூரி அணிக்காகக் கூடைப்பந்து விளையாடுகிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணா  மேல் நகுல்  அடித்த பந்து பட்டு இறந்துபோகிறான். அதோடு, கூடைப்பந்து விளையாட்டை மறந்து வேறு கல்லூரியில் இரண்டாவது வருடப் படிப்பில் சேர்கிறார் நகுல். அங்கே புதிய நண்பர்கள் அம்ஜத் கான் மற்றும் ஜெகன் மற்றும் பணக்காரப் மாணவியின் (மிருதுளா) காதலும் நகுளுக்கு  கிடைக்கிறது. புதிய கல்லூரியில் ஏற்படும் ஒரு சம்பவத்தால் மீண்டும் கூடைப்பந்தைக் கையில் எடுக்கிறார் நகுல். பிறகு என்ன ஆகிறது என்பதே வல்லினம் படத்தின்  கதை. நகுல் வித்தியாசமான தோற்றத்துடன்  நன்றாக நடித்திருக்கிறார். நாயகியாக வரும் மிருதுளாவுக்கு நடிப்பதற்கான  வாய்ப்பு படத்தில் மிகவும் குறைவுதான். பாடல் காட்சிகளில்  மட்டும் அவரது பங்கு ஓரளவுக்கு உள்ளது. கூடைப்பந்து பயிற்சியாளராக நடித்திருக்கும் அதுல் குல்கர்னி, கிரிக்கெட் விளையாடும் இளைஞராக வரும் வில்லன் சித்து, கூடைப்பந்து போட்டிக்காக செலவு செய்யும் பணக்காரராக வரும் ஜெயப்பிரகாஷ், மற்றும் நண்பர்களாக வரும் அம்ஜத் கான் மற்றும் ஜெகன் ஆகியோர் சிறப்பாக தங்கள் பங்கை செய்துள்ளார்கள். எஸ். தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஆனால், பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருக்கிறது. படத்தில் உள்ள சிறப்பான விஷயங்களில் ஒன்று பாஸ்கரின் ஒளிப்பதிவு. விஜய் மில்டனின் உதவியாளராக இருந்து இந்த படம் மூலமாக ஒளிப்பதிவாளராக களமிறங்கியிருக்கும் பாஸ்கர் சாட்டுகளில் மிக நேர்த்தியாகவும் லைடிங்கில் மிகுந்த சிரத்தை எடுத்தும் செய்திருக்கிறார் என்பது படத்தில் வெளிபடுகிறது. விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தின் திரைக்கதைக்கு பக்கப்பலமாக  ஒளிப்பதிவு செயல்பட்டு   இயக்குனருக்கு கைகொடுத்துள்ளது.   நாயகனுக்குக் கதையில் கூடைப்பந்தில் வெல்வதை இலக்காக வைத்த இயக்குனரைப் பாராட்டலாம்.
இந்த மாதிரி படங்களுக்கு பொதுவான ஒரு கட்டமைப்பு உண்டு. புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு. அந்த விளையாட்டை  விளையாட ஆர்வத்துடன் களமிறங்கும் மாணவர்கள் அதற்கு தலைமை ஏற்பவன் கதாநாயகன். மனம் வெதும்பி நிற்கும் ஒரு முன்னாள் வீரர் அந்த விளையாட்டுக்கு கோச்.  அந்த விளையாட்டை ஒழிக்க நினைக்கும் மற்ற விளையாட்டு வீரர்கள் அல்லது வில்லன்கள். க்ளைமாக்ஸில் கடைசி கட்டத்தில் வெற்றி..! இப்படிப்பட்ட ஒரே கோட்பாட்டை கொண்ட கதை என்றாலும் இது போன்ற கதைகளில் சுவாரசியம் உள்ளடக்கப்பட்டே இருக்கும் அதன் காலத்தையும் கதாபாத்திரத்தையும் அமைப்பது மட்டுமே திரைகதை ஆசிரியனின் வேலை. அதை அறிவழகன் எதார்த்தமான வசனங்களுடன் அமைத்திருக்கிறார். அந்த எதார்த்த வாசனைகள் திரைகதையில் முக்கியமான இடங்களில் நகுல் பேசும்போது பஞ்ச் வசனகளாகவும் மாறுகிறது..
வெற்றி கோட்பாட்டை கொண்டு படம் இயக்கி இந்த குழுவினர் வெற்றியும் கண்டுள்ளனர். வல்லினம் இன்றைய தினத்தில் கல்லூரி மாணவர்களால் கொண்டாடி பார்க்கப்படும் திரைப்படம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)