Recent Post

சரித்திரம் பேசு முன்னோட்டம்




அய்யனார் பிலிம் பட நிறுவனம் சார்பில் யோகேஸ்வரன் போஸ் தயாரிக்கும் படம் சரித்திரம் பேசு. இதில் அகிலன் படத்தில் நடித்த மதுரை டாக்டர் சரவணன் வில்லத்தனமான நாயகனாக நடிக்கிறார். இளம் ஜோடிகளாக கிருபா, கன்னிகா அறிமுகமாகின்றனர். யோகேஸ்வரன் போஸ் இன்னொரு நாயகனாக வருகிறார். தாரணி, கஞ்சா கருப்பு, வெங்கல்ராவ், பரளி, நாகராஜ், பாண்டிராஜ், செல்லத்துரை, கிரிக்கெட் மூர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஸ்ரீமகேஷ் இயக்குகிறார். இவர் சத்ரபதி படத்தை டைரக்டு செய்தவர். படம் பற்றி அவர் சொல்கிறார்.

தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ஜாலியாக திரிபவர்கள் கிருபாவும், அவரது நண்பர்களும். கொலை என்றாலே தூரம் ஓடுபவர்கள். ஆனால் சூழ்நிலை அவர்களை எப்படி கோபக்காரர்களாக மாற்றியது என்பது கதை. கமர்ஷியல் படமாக தயாராகிறது. முதல் பாதி காமெடியாகவும் இரண்டாம் பாதி பரபரப்பான ஆக்ஷனிலும் தயாராகிறது.

ஒளிப்பதிவு: ஜெகதீஷ், வி.விஸ்வம், இசை: ஜெயகுமார், எடிட்டிங்: லட்சுமணன், ஜெரோம், பாடல்: யோகஸ்வரன் போஸ், ஜெயக்குமார், பசுபதி, அழகப்பன், பேராசிரியர் ஜெயபால், ஸ்டாலின், தயாரிப்பு மேற்பார்வை: ஆர்.எம். சேகர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)