Recent Post

பாலா படத்துக்காக சசிகுமார் போட்ட புதிய கெட்டப்... தாடி - மீசைக்கு 'பை'!



பாலா இயக்கும் கரகாட்டம் படத்துக்காக முற்றிலும் புதிய கெட்டப்பில் தோன்றவிருக்கிறார் சசிகுமார். வழக்கமாக மீசை, தாடியுடன் தோன்றும் சசிகுமார் இந்த படத்திற்காக அவற்றை மழித்து விட்டார். முகத்தில் பென்சிலால் கோடு போல் மீசையை வரைந்துள்ளார். சுருண்ட தலைமுடியுடன் கிட்டத்தட்ட நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போலத் தோற்றமளிக்கும் அவர், சமீபத்தில் அதே பாலாவின் அலுவலகத்துக்குப் போனாராம்.

பாண்டி பஜாரில் 

இந்த கெட்டப்பில் மக்கள் தன்னை அடையாளம் காண்கிறார்களா என்பதை அறிய அப்படியே கடைகள் நிறைந்த தி நகர், பாண்டி பஜாரில் நடந்து போனார். ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை.


உள்ளே விட மறுப்பு 

அடுத்து ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்குப் போயுள்ளார். அங்கிருந்த பணியாளர் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். தான் சசிகுமார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக வந்துவிட்டாராம்

நாதஸ்வர பயிற்சி 

கரகாட்டக்காரராக நடித்து வரும் சசிகுமார் தேர்ந்த நாதஸ்வர கலைஞர்களிடம் ஒரு மாதமாக பயிற்சி பெற்று வருகிறார். கரகாட்ட கலைஞராக வரலட்சுமியும், நாதஸ்வரம் இசைப்பவராக சசிகுமாரும் நடிக்கிறார்களாம்.

இசைப் பதிவு 

இந்தப் படத்துக்கான தவில் - நாதஸ்வர இசைப் பதிவு சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இளையராஜா இசையமைக்கும் 1000வது படம் கரகாட்டம் என்பதை நேற்றே நாம் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)