Recent Post

ஸ்ருதிஹாசன் நடித்த தெலுங்குபட போஸ்டரை கிழித்தெறிந்த ஆந்திர போலீசார்!




Allu Arjun, Shruti Haasans hot pose goes viral
தமிழில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கு, இந்தி படங்கள் என்று வருகிறபோது வரிந்து கட்டி விடுகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரேஸ் குராம் என்ற படத்தில் இதுவரை எந்த தெலுங்கு படத்திலும் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ஸ்ருதி.

பப்ளிசிட்டிக்காக அப்படத்தின் போஸ்டர்களை ஆந்திராவிலுள்ள முக்கிய சாலைகளில் ஒட்டியபோது, சாலையில் சென்ற மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டு அந்த ஆபாச போஸ்டர்களைத்தான் ஜொள் விட்டார்களாம். இதனால் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, விபத்துக்களும் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரம் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட முக்கிய ஏரியாக்களில் போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்களாம். இதனால், ஆந்திர போலீசாரே களமிறங்கி அப்பட போஸ்டர்களை கிழித்தெறிந்து விட்டார்களாம். அதோடு, இனிமேல் இந்த மாதிரி ஆபாச போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்று அந்த பட நிறுவனத்தையும் எச்சரித்துள்ளார்களாம்.

இப்படி ஆபாச போஸ்டர் விவகாரம் ஆந்திராவில் பத்தி எரிந்ததால், தனக்கு எதிர்ப்பாகவும் மகளிர் அமைப்புகள் கொடி பிடிக்க நேரும் என்பதால், தற்காலிகமாக ஐதராபாத் முகாமை மும்பைக்கு உடனடியாக மாறறியுள்ளாராம் ஸ்ருதிஹாசன்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)