Recent Post

உனக்கும் லட்சுமி மேனனுக்கும் என்ன சம்பந்தம்? விஷாலிடம் கேள்வி எழுப்பிய விஷ்ணு!



விஷால் தனது பட நிறுவனம் சார்பில் யுடிவி நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ள படம் நான் சிகப்பு மனிதன். லட்சுமி மேனன், இனியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தீராத விளையாட்டு பிள்ளை, சமர் படங்களுக்கு பிறகு திரு இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், விஜய் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு, விக்ராந்த், சாந்தனு, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் பாலா பேசியபோது “நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் ஹீரோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கென்னவோ இது என்னை பழிவாங்க விஷாலும், திருவும் இணைந்து யோசித்த திட்டம் என்றே தோன்றுகிறது. நான், காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்கு தான் போவேன். அது மாதிரி இரவு படப்பிடிப்பு என்றால் அதிகாலையில் தான் போவேன். எல்லாத்துக்கும் காரணம் என் தூக்கம் தான். இந்தப் படத்தில் விஷால் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரை பார்த்தபோது அது என் கேரக்டர் என்று எனக்கு பட்டது’’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய விஷ்ணு “நீ ஏன் லட்சுமிமேனனை என் கண்ணிலேயே காட்டாமல் அப்படி பாதுகாத்தாய்..? உனக்கும் லட்சுமி மேனனுக்கும் என்ன சம்பந்தம்? அதை இந்த மேடையில் சொல்லணும்” என விஷாலை அன்புடன் மிரட்டினார்.
அதற்கு பதிலளித்த விஷால், “லட்சுமி மேனனுக்கும் தனக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என்றும் இந்தப்படத்தில் லட்சுமிமேனன் நடிக்கும்போது தேவையில்லாமல் நீ படப்பிடிப்பு ஏரியாவுக்கு வந்திருந்தால் உன் அப்பாவின் கையாலேயே அரெஸ்ட் ஆகும் சூழ்நிலை உருவாகியிருக்கும் (விஷ்ணுவின் தந்தை போலீஸ் அதிகாரி).. அதை நான் தவிர்த்து உன்னை காப்பாற்றி இருக்கிறேன்.” என்று விஷ்ணுவை பதிலுக்கு கலாய்த்தார் விஷால்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)