நிமிர்ந்து நில்' படத்தினைத் தொடர்ந்து, சமுத்திரகனி புதிய படத்திற்கு தயாராகிவிட்டார்.
இந்தப் படத்தை தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் நாயகனாகவும் நடிக்கிறார். படத்திற்கு கிட்ணா என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். கிருஷ்ணா என்பதன் சுருக்கம் தான் கிட்ணா. இப்படத்தின் கதை 1970-களில் ஆரம்பித்து 2002-ல் முடிவது போன்று படமாக்கப்பட உள்ளது.
மேலும் படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் அமலா பால். படம் முழுவதும் காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.
காடும் காடு சார்ந்த இடமும் தான் படத்தின் கதைக்களம். நிச்சயம் இப்படம் அமலாபாலுக்கு நல்லதொரு பெயரை தரும் என்றார் சமுத்திரகனி.
