Recent Post

விஜய், முருகதாஸ் படத் தலைப்பு...?




விஜய் –  ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்றும் படத்திற்கு ‘கத்தி’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து விஜய், ஏ.அர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். அஜித்தின் ஆரம்பம் படத்தை போலவே தலைப்பை வைக்காமலேயே படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்கள்.
இதனால் படத்திற்கான தலைப்பு என்னவென்று தெரியாமல் பல பெயர்கள் அடிப்பட்டுக்கொண்டு இருந்தன. படத்திற்கு வாள், தீரன் என பெயரிடப்பட்டதாக வதந்திகள் வெளியாகின. ஆனால் அதையெல்லாம் முருகதாஸ் தரப்பு மறுத்து வந்தது. எனவே, படத்தின் தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது இந்த படத்திற்கு ‘கத்தி’ என தலைப்பு வைத்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்தப் படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றி ஒரு சின்ன தகவலும் கிடைத்துள்ளது. விஜய் நடிக்கும் இரண்டு கேரக்டரில் சிவானந்தம் என்ற நல்லவர் கேரக்டர் ஒன்று. இன்னொன்று கொல்கத்தாவை சேர்ந்த ரௌடி கேரக்டர். இந்த இரண்டு கேரக்டர்களுக்கிடையில் நடக்கும் கதையாம் கத்தி என்று கூறப்படுகிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)