இயக்குநர் மிஷ்கினின் குடும்ப வாழ்க்கை குறித்து அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
ஆனால், சொல்லாத ரகசியம் ஒன்று இருக்கிறது. மிஷ்கினின் தந்தை தேனாம்பேட்டையில் துணிகளைத் தைக்கும் சிறிய கடையை வைத்துத்தான் வாழ்க்கை நடத்துகிறார்.
மகனுடன் சேர்ந்து வாழவில்லை என்றாலும், மகன் இயக்கும் படங்களை சத்யம் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவார்.
அங்கேயே இருந்து படம் எப்படியிருக்கிறது என்று ரசிகர்களின் கருத்துகளையும் கேட்டுவிட்டுதான் வீடு திரும்புவார். மகன் இயக்கும் படங்களுக்கு முதல் ரசிகர் இந்த தந்தை.
