Recent Post

திரி விக்ரம், சித்தார்த் இவர்களில் யாரை காதலிக்கிறீர்கள் என்று கேட்காதீங்க: சமந்தா




சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக காதலிக்கின்றனர். கோவிலில் குடும்பத்தினருடன் ஜோடியாக சாமி கும்பிட வந்த போது இந்த காதல் அம்பலமானது.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. சமந்தா தெலுங்கிலும், சித்தார்த் தமிழிலும் பிசியாக நடிக்கின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அவர்களின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக இவர்களது காதல் பற்றி எவ்வித தகவலும் வெளியாகமல் இருந்தது.
இந்த நிலையில் நடிகை சமந்தா தான் ஒருவரை காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் காதலிப்பது உண்மைதான். ஆனால் யார் என்று இப்போதைக்கு சொல்ல மாட்டேன். தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம், சித்தார்த் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். திருமணம் உடனடியாக செய்து கொள்ள மாட்டேன்.
அதற்காக இவர்களில் ஒருவரைதான் காதலிக்கிறீர்களா என்று கேட்காதீர்கள். அதற்கு எனனிடம் பதில் இல்லை. நான்கு வருடங்கள் கழித்தே என் திருமணம் நடக்கும். எனக்கு குழந்தைகளை பிடிக்கும். அதற்காகவே திருமணம் செய்வேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)