Recent Post

சந்தானத்தை ஊக்கப்படுத்திய முன்னணி நடிகர்கள்!




'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடிக்கும் படம்  'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. இதில் சந்தானத்துக்கு இணையாக நாயகியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.
சமீபத்தில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு சந்தானத்துடன் இணைந்து நடித்த முன்னணி நடிகர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளதாம். இது சந்தானத்திற்கு மேலும் ஊக்கம் தந்து இருக்கிறதாம். மேலும் அவர் படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார். நாயகனாக நடிபதற்கென தீவிர எடை குறிப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல் பொலிவுடன் இருக்கிறார் சந்தானம்.
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், சந்தானம் தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும், ஜனரஞ்சகத்தில் ஒரு விகிதம் கூட குறைய கூடாது என்ற எண்ணத்தில் எல்லா காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். நகைசுவையில் கோலோச்சும் சந்தானம் குணசித்திரம், நடனம், சண்டை, காதல் என்று எல்லா காட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்‘ எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் தயாரிக்க படும் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாகும்‘ என்று கூறுகிறார் நகைசுவை நடிகரும், இந்த படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)