Recent Post

உத்த வில்லனுக்கு வில்லனான நாசர்!




'விஸ்வரூபம் -2' படத்தைதொடர்ந்து கமல் நடித்து வரும் படம் 'உத்தமவில்லன்'. இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
மனோரஞ்சனாக நடிக்கும், கமலின் குருவாக இயக்குனர் கே.பாலசந்தர் நடிக்கிறார். கமலின் மனைவியாக ஊர்வசி நடிக்கிறாராம். இவர்கள் தவிர 'விஸ்வரூபம்' படத்தில் நடித்த பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோரும் நடிக்கின்றனர். மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக, பூஜா குமார் நடிக்க, மனோரஞ்சனின் ரகசிய காதலியாக, ஆண்ட்ரியா நடிக்கிறாராம்.
இவர்களுடன் ஜெயராம், நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். கமல் நடித்த படங்களை எடுத்துக்கிட்டால் அதில் நாசருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கும். அந்த வகையில் உத்தம வில்லன் படத்தில் நாசர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர், முத்தரசன் எனும் 8-ஆம் நூற்றாண்டு வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்கு மட்டுமே நாசர் 26 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
தற்போது ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு பெஙகளூரில் நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு, மே மாதம் முதல் வாரத்திலிருந்து அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்கிவிடுமாம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)