Recent Post

பாலாவிடம் பாராட்டு பெற்ற வரலட்சுமி!



நடிகர் சரத்குமாரின் கலைவாரிசு வரலட்சுமி. சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமான இவர், அதையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்திலும் நடித்தார். அதோடு, அப்படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த அஞ்சலியுடன் ஹாட் போட்டியிலும் இறங்கினார். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அப்படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உடனடியாக எந்த படங்களையும் ஏற்கவில்லை வரலட்சுமி. பல படங்களின் கதை பிடிக்கவில்லை என்று தவிர்த்து வந்தார். இந்த நேரத்தில்தான், சசிகுமாரை நாயகனாக வைத்து தான் இயக்கும் தாரை தப்பட்டை படத்திற்கு வரலட்சுமியை புக் பண்ணினார் பாலா.

பாலாவின் படத்தில் நடிப்பது கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்பதால், மிகுந்த சந்தோசத்துடன் அப்படத்தில் ஒப்பந்தமான அவர், இப்போது சசிகுமாருடன் இணைந்து நிஜ கரகாட்டக் கலைஞர்களுடன் தினமும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே பல நடனங்களில் வரலட்சுமி கைதேர்ந்தவர் என்றபோதும், கரகாட்டம் அவருக்கு புதிது என்பதால், அதிக ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஒருநாள், வரலட்சுமி கரகாட்ட பயிற்சி பெறும் இடத்துக்கு சென்று பார்வையிட்ட பாலா, நிஜ கரகாட்ட கலைஞர்களைப்போன்றே அவர் நடனமாடியதைப்பார்த்து அசந்து விட்டாராம். அதையடுத்து வரலட்சுமியை மனதார பாராட்டியிருக்கிறார்.ஆக, படம் ஆரம்பிக்கும் முன்பே பாலாவிடம் பெற்ற இந்த பாராட்டினால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் வரலட்சுமி.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)