பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரை ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதால் இப்போது அதே ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தியாவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியிருப்பதால், இந்த படத்தில் தனக்கு நடிக்க சான்ஸ் கிடைத்ததை பெருமையாக குறிப்பிட்டு வருகிறார் அவர்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கோச்சடையான் படத்திற்காக என்னை நடிக்க கேட்டு வந்தபோது, நான் என்ன கதை, எனது கேரக்டர் என்ன என்று எதைப்பற்றியும கேட்கவில்லை. ரஜினி சார் ஹீரோ என்றதும் மறுபேச்சின்றி நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். காரணம், ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதை மிகப்பெரிய கவுரவமாக நினைத்தேன். மேலும், இப்படம் மூலம் ரஜினியை நெருங்கியதால் அவரது சினிமா அனுபவங்கள் மற்றும் சினிமா பற்றிய நிறைய அறிவுரைகள் எனக்குக் கிடைத்தது. ஆக, கோச்சடையான் எனது சினிமா கேரியரில் முக்கியமான படமாகி விட்டது என்கிறார் தீபிகா.