Recent Post

காதலை மறந்து நடிப்பில் கவனம் செலுத்து அக்ஷரா ஹாசனிடம் சரிகா கண்டிப்பு



காதலை மறந்து நடிப்பில் கவனம் செலுத்து அக்ஷரா ஹாசனிடம் சரிகா கண்டிப்பு
காதலிப்பதில் கவனத்தை குறைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்துமாறு மகள் அக்ஷராவை கண்டித்தார் சரிகா. கமலின் மாஜி மனைவி சரிகா மும்பையில் வசிக்கிறார். மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறார். 2வது மகள் அக்ஷரா தாய் சரிகாவுடன் தங்கி இருக்கிறார். சினிமா தொழில்நுட்ப கலைஞராக வேண்டும் என்று எண்ணி இருந்த அக்ஷராவுக்கு தனுஷுடன் இந்திபடத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. பால்கி இயக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில் அக்ஷராவுக்கும், மாஜி ஹீரோயின் ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதுடன், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையானால் தனுஜை அவரது வீட்டில் சந்தித்து பொழுதை கழிக்கிறார் அக்ஷரா. அவர்களுடன் நண்பர்களும் சேர்ந்துகொண்டு அரட்டை கச்சேரி நடத்துகின்றனர். தனுஜ் விர்வானியுடன் சுற்றுவதிலேயே குறியாக இருக்கும் அக்ஷராவை சரிகா கண்டித்துள்ளார். காதலிப்பதை குறைத்துக் கொண்டு நடிப்பில் கவனம் செலுத்து என்று அட்வைஸ் செய்தாராம். ஆனால் அதை அக்ஷரா காதில் வாங்கிகொள்ளாமல் காதல் விளையாட்டில் மயங்கி கிடப்பதாக பாலிவுட்டில் கிசு கிசு பரவியுள்ளது.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)