மும்பை: சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்தால் கவுரவம் என்பதாலேயே எனது கதாபாத்திரத்தைக் கூட விசாரிக்காமல் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார் ஹிந்தி நடிகை தீபிகா படுகொனே. ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் ஷாரூக்கான் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை தீபிகா படுகோனே. முதல் படமே அவருக்கு முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. தற்போது அதிக வருமானம் வாங்கும் வெற்றிப்பட நாயகிகளில் ஒருவராக திரை உலகில் பிரகாசிக்கிறார் தீபிகா. இந்நிலையில், கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் தீபிகா. அப்பட அனுபவம் குறித்து ச்செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது :-
ரஜினிக்காக மட்டும்...

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், பட இயக்குனருமான சவுந்தர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகியபோது, கதையம்சம், திரைக்கதை அல்லது தீபிகாவின் கதாபாத்திரம் என எதனையும் நான் கேட்கவில்லை. உடனே நடிக்க ஒப்பு கொண்டேன்.
கவுரவம்....

காரணம் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒன்றாக நடிப்பது என்பது எனக்கு மிக பெரிய கவுரவம் எனக் கருதினேன்.
நல்ல வாய்ப்பு...

மேலும், அவருடன் பேசுவதற்கும், அவருடன் சினிமா குறித்து விவாதிப்பதற்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே இப்பட வாய்ப்பை உணர்ந்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மோசன் கேப்சர்....

இந்தியாவிலேயே முதல்முறையாக ‘மோசன் கேப்சர்' தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாக உள்ளது.
மீண்டும் நாகேஷ்...

இப்படத்தில் ரஜினி மற்றும் தீபிகா படுகோனேவுடன் நடிகர்கள் ஜாக்கி ஷெராப் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர் நாகேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல் காட்சிகள் தொகுக்கப் பட்டுள்ளன
முதல் படம்...

இப்படம் ரஜினியின் மகளான சவுந்தர்யா இயக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது