காதல்கோட்டை படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக உள்ளார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடிகை. மூன்றாவது மகள் நிரஞ்சனி, காஸ்ட்யூம் டிசைனராகிவிட்டார். வசந்தபாலன் இயக்கும் பீரியட் பிலிமான காவியத் தலைவன் படத்திற்கு நிரஞ்சனி தான் காஸ்ட்யூம் டிசைனர். இது தவிர சிகரம் தொடு, வாயை மூடி பேசுவோம் படத்திலும் பணியாற்றி வருகிறார்.
காஸ்ட்யூம் டிசைனர் ஆனது பற்றி நிரஞ்சனி கூறியிருப்பதாவது: அகத்தியன் பொண்ணா இருந்தாலும் சினிமாமேல பெருசா இண்ட்ரஸ்ட் இல்லை. ஆனால் காலம் என்னை சினிமாவுல கொண்டு வந்து விட்டுவிட்டது. பி.எஸ்.சி எலெக்ட்ரானிக்ஸ் முடிச்சிட்டு ஒரு தனியார் டி.யில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு டிசைனரா ஆனா என்ன என்று தோணிச்சு. இந்த துறையில் பிரபலமாக இருக்கிற நளினி ஸ்ரீராம்கிட்ட அசிஸ்டெண்டா வேலைக்குச் சேர்ந்தேன். விண்ணைத்தாண்டி வருவாயா, முப்பொழும் உன் கற்பனைகள், நீதானே என் பொன்வசந்தம் படங்களில் அவரோட ஒர்க் பண்ணினேன். அதன் பிறகு சிகரம் தொடு படத்தில் தனியாக வேலை செய்ய ஆரம்பித்தேன். இப்போ பெரிய புராஜக்டான காவியத் தலைவன் வரைக்கும் வந்திருக்கேன். நடிக்கிறதுக்கு சில அழைப்புகள் வந்தது. அதுல எனக்கு இஷ்டம் இல்லை. சின்சியாரிட்டியும், பங்சுவாலிட்டியும் முக்கியம்னு அப்பா சொல்லி அனுப்பியிருக்கார். அதை ஃபாலோ பண்றேன் என்கிறார் நிரஞ்சனி.