Recent Post

பிரமுகர்




ஸ்ரீலஷ்மி சண்முகானந்தம் பிலிம்ஸ் மற்றும் வி.ஜெ.என்டர் டைன்மென்ட் சார்பில் டி.டி.சுரேஷ், ஆர்.எஸ்.மணிகண்டன் தயாரிக்கும் படம் பிரமுகர்.

இதில் நாயகனாக திரிசுல்கராத்தே மணி நடிக்கிறார். இவர் மறைந்த நடிகர் கராத்தே மணியன் மகன். நாயகியாக மஞ்சுரத்தோர் நடிக்கிறார். மோகன், ஜெகதீஷ், பாரத், ஜெஸ்ஸி, நித்யா, ஓவியர், கே.என்.ராமச்சந்திரன், ராம்அழகர், கர்ணா, பாஸ்கரன், அனு, ஞானசேகரன் ஆகியோரும் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் டி.டி.சுரேசும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தை ஜேப்பி அழகர் இயக்குகிறார். இவர் விஜயகாந்தை வைத்து சுதேசி படத்தை டைரக்டு செய்தவர்.

பிரமுகர் படம் பற்றி அவர் கூறும் போது நம் தலைமுறை தழைக்கவும் அடுத்து வரும் தலைமுறை செழிக்கவும் என்ன செய்ய வேண்டும். எதை செய்தால் வளைந்த ஏழை சமுதாயத்தின் முதுகெலும்பு நிமிரும் என்பதை இனங்கண்டு போராட கிளம்பும் நான்கு சாதாரண இளைஞர்களின் போராட்ட கதையே படம். காதலுக்காக காலத்தை விரயம் செய்கிறவனை வாழ்வில் ஜெயிக்க ஏன் போராட கூடாது என்று இந்த படம் யோசிக்க வைக்கும். பொழுது போக்கு அம்சங்களும் இருக்கும். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.

இசை: எல்.வி.கணேசன், ஒளிப்பதிவு: ஹார்முக், எடிட்டிங்: ஈஸ்வர், ஸ்டண்ட்: நாக்அவுட் நந்தா.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)