Recent Post

வங்கி கணக்கை கையாள தயாரிப்பாளர் சங்கத்துக்கு நீதிமன்றம் தடை



தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது கேயார் தலைமையில் ஒரு அணியும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியும் இருக்கிறது. கேயார் அணி நிர்வாகத்தில் இருக்கிறது. கேயார் அணியிலிருந்து போட்டியிட்டு பொருளாளராக வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன் தற்போது தாணு அணிக்கு தாவி விட்டார்.

தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின்படி வங்கி கணக்கை கையாள பொருளாளரும், செயலாளரும் இணைந்து கையெழுத்திட வேண்டும். இப்போது பொருளாளளர் எதிர் அணிக்கு சென்று விட்டதால் இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பொருளாளர் ராதாகிருஷ்ணன் "தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. பொருளாளராகிய எனது கையெழுத்து இல்லாமல் வங்கி கணக்கை கையாளக்கூடாது" என்று உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி வருகிற 20ந் தேதி வரை பொருளாளர் கையெழுத்து இல்லாமல் வங்கி கணக்கை கையாள இடைக்கால தடை விதித்ததோடு இதற்கு பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் இந்தியன் வங்கியின் ஆயிரம் விளக்கு கிளை மேலாளருக்கும் உத்தரவிட்டார். 

(அருகில் உள்ள படத்தில் பொருளாளர் ராதாகிருஷ்ணன், தலைவர் கேயார்).

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)