Recent Post

பிரமுகர் தாமதம் ஏன்?



பிரமுகர் தாமதம் ஏன்?
ஸ்ரீலட்சுமி சண்முகானந்தம் பிலிம்ஸ் மற்றும் விஜே என்டர்டெயின்மென்ட் சார்பாக எஸ்.மணிகண்டன், டிடி சுரேஷ் தயாரிக்கும் படம், பிரமுகர். சுதேசி ஜே.பி.அழகர் இயக்குகிறார். புதுமுகங்கள் திரிசூல், மோகனவேல், ஜெசி, கர்ணா, மஞ்வா, தயாரிப்பாளர் டி டி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹார்முக் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.கணேசன் இசை. படம் பற்றி ஜேப்பி. அழகர் கூறியதாவது: இது வழக்கமான காதல் கதை அல்ல. இன்றைய அரசியல் சூழலை மாற்ற நினைக்கிற நான்கு சாதாரண மாணவர்களை பற்றிய கதை. காதலில் ஜெயிக்கப் போராடும் ஒவ்வொரு இளைஞனும் வாழ்க்கையில் ஜெயிக்க ஏன் போராடக்கூடாது என்று யோசிக்க வைக்கும் படம் இது. திரிசூல் இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார். அதற்காக உடலை வருத்தி உணவு கட்டுப்பாடு கொண்டு வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அதற்காக சில மாதங்கள் ஆனது. அதனால் படத்தின் காப்பி எடுப்பதற்கு கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஜேப்பி அழகர் கூறினார்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)