நியூயார்க் பிலிம் அகாடமியில் படித்து விட்டு தமிழ் படம் இயக்குகிறார் தரணிதரன். படத்தின் பெயர் பர்மா. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பீட்சா, சூது கவ்வும் டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு வேலை செய்து கொண்டிருக்கிறது.
"இது ஒரு கிரைம் திரில்லர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்குறோம். இதில் சம்பத், அதுல்குல்கர்னி இருவரும் இதுரை நடிக்காத புதிய கேரக்டர்களில் மிரட்டுவார்கள். இவர்களுடன் மைக்கேல், ரேஷ்மி மேனன் இளம் ஜோடிகளாக நடிக்கிறாங்க.
படத்தில் ஒரு கார் முக்கிய கேரக்டராக வருகிறது. அதுவும் விலை உயர்ந்த கார். அந்த காருக்கு ஒரு நாள் வாடகையே பத்தாயிரம் கேட்டார்கள். நாங்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தை அணுகி கதை சொன்னோம். கதை அவர்களுக்கு பிடித்துப் போனதால் சுமார் ஒண்ணறை கோடி மதிப்புள்ள புத்தம் புதிய பிஎம்டபிள்யூ காரை படப்பிடிப்புக்கு தந்தார்கள். படப்பிடிப்பின்போது காருக்கு சில சேதாரங்கள் ஏற்பட்டது. அதைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப் படவில்லை. படத்தில் கார் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்ப திகிலாக இருக்கும்" என்றார்.