Recent Post

தும்பிக்கை இது தெய்வம்




வெள்ளச்சி சினி கிரியேஷன்ஸ் சார்பில் கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக தயாரிக்கும் படம் தும்பிக்கை இது தெய்வம்.

இதில் புதுமுகங்கள் ராமசந்திரன், குமார், ரவிகுமார், சத்யசீலன், இளங்கோவன், முரளி, பிலால் பாபு, அபிராமி, கஸ்தூரி, மஞ்சுளா, பானு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமிழ் ஜெ.இயக்குகிறார். இவரே ஒளிப்பதிவும் செய்கிறார்.

ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை அடக்க இளைஞர்கள் ஒன்று சேர்கின்றனர். யானைகள் ஊருக்குள் புகுந்து ஏன் அமர்க்களம் செய்கின்றன என்பதை கண்டறிய அந்த இளைஞர்கள் காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சியும் கிடைத்த தகவலும் அதிர்ச்சியூட்டுகின்றன.

திகிலோடு திரும்பும் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்து இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான முடிச்சுகளுடன் திகில் படமாக தயாராகிறது. முருகன்பதி, சின்னகானூர், ஊட்டி, முதுமலை, கோவை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இசை: ஹித்தேஷ், எடிட்டிங்: முருகராம், ஸ்டண்ட்: நாக்அவுட் நந்தா, நடனம்: கருணா.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)