'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. சில நாட்களாக தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.
தற்போது அவரது சினிமா மார்க்கெட் சுத்தமாக ஓய்ந்துப் போய் கிடக்கிறதாம். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் அவருக்கு மலையாள திரையுலகம் கைகொடுத்துள்ளது.
ஜெயராம் ஜோடியாக ‘நாவல்’ என்ற மலையாள படத்தில் நடித்த சதா, அடுத்து ’கேள்வி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஹாஷிம் மரைக்கார் இயக்குகிறார். இந்தப் படத்தில் மனோஜ் கே.ஜெயன் நாயகனாகவும் ஸ்வேதா மேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் சதாவும் நடிக்கிறார். அதுவும் படத்தில் அவர் நடிகை சதாவாகவே வருகிறார். இதில் சதாவுக்கு டான்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டராம். க்ரைம் த்ரில்லர் படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்து வருகிறது.
