
ராஜா ராணி படத்தை போலவே இது நம்ம ஆளு படத்தின் புரமோஷனுக்கும் நயன்தாராவுக்கு திருமணம் என போஸ்டர்கள் ஒட்ட உள்ளனர். சிம்பு, பிரபுதேவாவை பிரிந்த பிறகு ஆர்யாவுடன் நட்பாக பழகினார் நயன்தாரா. இதை தனது பட புரமோஷனுக்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த இயக்குனர் அட்லி, ராஜா ராணி பட போஸ்டரில் ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என அச்சிட்டு, கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமண கோலத்தில் இருப்பதுபோல் ஊர் முழுக்க போஸ்டர் ஓட்ட வைத்தார். இது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரக்டர்களின் பெயரை போட்டு இவர்களுக்கு திருமணம் என போட்டிருந்தால் பரவாய¤ல்லை. ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என குறிப்பிட்டது ஏன் என டைரக்டரை நயன்தாரா கடிந்துகொண்டார்.
இந்த கோபத்தால்தான் அந்த பட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சிம்புவுடன் மீண்டும் இணைந்து இது நம்ம ஆளு படத்த¤ல் நடிக்கிறார் நயன்தாரா. இதுவும் ராஜா ராணி படத்தை போல தம்பதியின் காதல் கதை. இதிலும் திருமண காட்சி ஒன்று இடம்பெறுகிறது. மே 1ம் தேதி இந்த பட போஸ்டர்களை ஒட்டும்போது அதில் சிம்பு-நயன்தாரா திருமணம் என திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவுடன் விளம்பரம் செய்ய சிம்பு
திட்டமிட்டுள்ளாராம்.
இந்த விவரம் நயன்தாராவுக்கு தெரியாது என சொல்லப்படுகிறது. ஆர்யாவை தொடர்ந்து சிம்புவும் நயன்தாராவின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார் என கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள்.