
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி இந்தி ரீமேக்கிலும் நடித்த அசினுக்கு அதன்பிறகு இந்தியில் மார்க்கெட் சூடு பிடிக்கவே, தென்னிந்திய சினிமாவை மறந்து விட்டு முழுநேர பாலிவுட் நடிகையாகி விட்டார். சில கோலிவுட் டைரக்டர்கள் அழைத்தபோதும் வராதவர், விஜய் நடித்த காவலன் படத்தில் மட்டுமே நடித்தார். அதையடுத்து மறுபடியும் பாலிவுட்டுக்கு ஓட்டம் பிடித்தார்.
ஆனால், தற்போது அவரது இந்தி சினிமா மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதையடுத்து, மீண்டும் தென்னிந்தியாவில் ஆட்டத்தை ஆரம்பிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் அசின். இந்த நிலையில், கடல் படத்தையடுத்து தான் இயக்கும் புதிய படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கவிருக்கும் மணிரத்னம், அசினையும் ஒரு நாயகியாக புக் பண்ணியிருக்கிறார்.
நாகார்ஜூனா, மகேஷ்பாபு ஆகியோர் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக அசினும், மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். இதேபடத்தில் முதலில் ஐஸ்வர்யாராய்தான் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடிக்கயிருந்தார். ஆனால் தற்போதைக்கு நடிப்பதை அவர் தவிர்ப்பதாக சொன்னதையடுத்தே அந்த வாய்ப்பு அசினுக்கு கிடைத்திருக்கிறது