2012ம் ஆண்டு மும்பையில் தொழிலதிபரை ஒருவரை தாக்கிய வழக்கில், இந்தி நடிகர் சைப் அலிகான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைப் அலிகான். 2012ம் ஆண்டு இவர், இவரது மனைவி கரீனா கபூர், நடிகைகள் கரீஷ்மா கபூர், மலைக்கா அரோரா கான், அம்ரிதா அரோரா மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து மும்பையில், தாஜ் ஓட்டலில் விருந்து சாப்பிட சென்றனர். இவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகில் மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த இக்பால் சர்மா என்பவரும் தனது குடும்பத்துடன் விருந்து சாப்பிட சென்றார்.
அப்போது சைப் மற்றும் அவரது நண்பர்கள் சத்தம் போட்டு பேசியதாகவும், அதற்கு இக்பால் சர்மா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட இறுதியில், சைப் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து இக்பால் சர்மாவை தாக்கியுள்ளனர். இதில் இக்பால் சர்மாவுக்கு மூக்கு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இக்பால் சர்மா போலீஸில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் அப்போது சைப் அலிகான் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது, சைப் அலிகான் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.