Recent Post

முன்னோட்டம்: ஆடாம ஜெயிச்சோமடா



அப்ஷாட் பிலிம்ஸ் பி.மதுசூதனன் வழங்க ஸ்கை லைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயினுடன் இணைந்து பி அண்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா. இவர் ஏற்கனவே வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு படங்களை இயக்கியுள்ளார். ஆடாம ஜெயிச்சோமடா ஐந்தாவதாக வருகிறது.

இதில் ‘சூதுகவ்வும்’ கருணாகரன் ‘நேரம்’ சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் ஆகியோர் நடிக்கின்றனர். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார். படம் பற்றி பத்ரி சொல்கிறார்.

கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து காமெடி கதையம்சத்தில் தயாராகிறது. விளையாட்டு விதிகள் மாறிவிட்டன. ஊழலும், சூதாட்டமும் அதில் புகுந்து விட்டது. தோற்கிறவனுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. அதை இந்தியா பாகிஸ்தான் கடைசி ஓவர் விளையாட்டு மாதிரி வேகத்துடன் ரசிக்கிற படமாக எடுத்துள்ளேன். இப்படத்துக்கு நடிகர் சிவா வசனம் எழுதுகிறார். எழுத்தாளர் சாண்டில்யன் பேரன் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு: துவாரகநாத். எடிட்டிங்: கே.ஐ.வெங்கட் ரமணன், சென்னை, ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடந்தது.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)