Recent Post

நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசை: போராளி திலீபன்




சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “நிமிர்ந்துநில்” படத்தில் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கைதட்டல்களையும் பெற்றவர் போராளி திலீபன். லஞ்சம் வாங்குவதையே தொழிலாக கொண்டு பின்பு திருந்தி நாயகன் ஜெயம்ரவிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இன்று தெரிந்த நட்சத்திரம் ஆகி விட்டார்.
அவரிடம் அவரது வாழ்க்கை பயணம் பற்றி கேட்டோம்..
கோவையில் டிப்ளமோ படித்து விட்டு சென்னைக்கு வந்து இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக சேர்ந்து வானத்தை போல,உன்னை நினைத்து போன்ற படங்களில் பணியாற்றினேன். பிறகு கஸ்தூரி ராஜாவிடம் டிரீம்ஸ் கே.பாலச்சந்தரிடம் “பொய்” சமுத்திரகனியிடம் நெறஞ்ச மனசு சுசீந்திரனிடம் ராஜாபாட்டை போன்ற படங்களிலும் உதவியாளராக பணியாற்றினேன்.
போராளி படத்தில் சமுத்திரகனி சார் என்னை குடிகார குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிகராக்கினார். அடுத்து குட்டிபுலி படத்தில் சரன்யாவுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் புலிவால் படத்தில் விமல் நண்பன் என நடித்த நான் நிமிர்ந்து நில் மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கிறேன்.
முழுக்க முழுக்க நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசை என்கிறார் போராளி திலீபன்.
தற்போது இவர் “வெள்ளை குதிரையில் ராஜகுமாரன்” என்ற படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார்.புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் போராளி திலீபன் மருந்துக்குக் கூட மேக்கப் போட வில்லை ஒன்லி டைரக்ஷன் மட்டுமே.
என்னை நல்ல நடிகனாக்கிப் பார்த்த என் குருநாதர் சமுத்திரகனி அவர்களுக்கு என் ஆயுள் முழுக்க நன்றிக் கடன் பற்றிருக்கிறேன் என்கிறார் போராளி திலீபன்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)