Recent Post

விஷால்-ஹரி-ஸ்ருதிஹாசன் இணையும் பூஜை!




‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை தொடர்ந்து ஹரி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால்.
இந்தப் படத்திற்கு ‘பூஜை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, முகேஷ் திவாரி, தலைவாசல் விஜய், ஜெயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சித்தாரா, அபிநயா, கௌசல்யா, ரேணுகா, ஐஸ்வர்யா, சார்லி, மனோபாலா, ஜானகி சபேஷ், சந்தான பாரதி, கராத்தே ராஜா, பிளாக் பாண்டி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ். இந்தப் படத்தையும் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம்தான் தயாரிக்கப் போகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, பாடல்களை நா. முத்துக்குமார் எழுதுகிறார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்ப்புத்தாண்டுக்குப் பிறகு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தாமிரபரணி’ படத்திற்குப் பிறகு விஷால் – ஹரி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)