என்னது கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்யப்போகிறாரா? எந்த கட்சிக்கு என்றெல்லாம் வீணாக கற்பனை செய்ய வேண்டாம். தேர்தலில் நேர்மையாக ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையம் கமல்ஹாசனை நடிக்க (பேச) வைத்து ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரசார கேசட்டை தயாரித்திருக்கிறது. அதனை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டார்.
அதில் தோன்றி கமல்ஹாசன் பேசியிருப்பதாவது: நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளில் முக்கியமானது தேர்தலில் ஓட்டளிப்பது. ஓட்டளிப்பது என்பது சுய சிந்தனையுடன் யோசித்து வேட்பாளர்களின் தகுதியை உணர்ந்து, அறிந்து ஓட்டளிப்பதாகும். இந்த வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுத்தார். அந்த வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுத்தார் என எண்ணி ஓட்டளிக்காதீர்கள்.
நாம் நம் எதிர்காலத்தை எந்த வேட்பாளரின் கையில் ஒப்படைக்கப்போகிறோம் என்பதை சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். ஒரு சிறு தொகைக்காக உங்கள் தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்று விடாதீர்கள். ஜனநாயகம் தழைத்தோங்க சிந்தித்து ஓட்டளிப்போம். எந்த சூழ்நிலையிலும் ஓட்டினை விற்க மாட்டோம் என்று உறுதி ஏற்போம். ஜெய்ஹிந்த்.
இவ்வாறு கமலஹாசன் பேசி உள்ளார்.
இது தொலைக்காட்சிகள், தியேட்டர்கள், பொது இடங்களில் திரையிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் ஊடக பிரிவு இணை ஆணையர் சிவஞானம் செய்து வருகிறார்.