
தகுதிக்கு மீறி அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் இருப்பதாக அமலா பால் தாக்கி பேசியுள்ளார். இதுபற்றி அமலா பால் கூறியதாவது: படங்களை ஒப்புக்கொள்ளும்போது அப்படத்தின் ஹீரோ யார் என்பது இரண்டாம்பட்சம்தான். என்னுடைய கவனம் கதையின் மீதும் எனது கதாபாத்திரத்தின் மீதும்தான் இருக்கும். இதுவரை நான் நடித்த படங்களை பார்த்தால் என் மனதுக்கு பிடித்த படங்களாகவே நடித்திருக்கிறேன். அப்படங்களை ஒப்புக்கொண்டதற்காக சந்தோஷமே. தமிழ், மலையாள படங்களைப் பொறுத்தவரை உண்மையிலேயே எனக்கு 100 சதவீதம் மகிழ்ச்சி இருக்கிறது. மனப்பூர்வமாக அந்த கதாபாத்திரங்களில் நடித்தேன். தெலுங்கு படங்களை பொறுத்தவரை வர்த்தக ரீதியிலான படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறேன்.
ஒரு சில காட்சிகளும், 4 பாடல்களும் கொண்ட படங்கள் எனக்கு தேவையில்லை. பல ஹீரோயின்கள் தகுதிக்கு மீறி அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற சிலர் தகுதிக்கு ஏற்ற சம்பளம்தான் பெறுகிறோம். பல படங்கள் வெளிநாடுகளில்தான் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்தமாக நிறைய நாட்கள் கால்ஷீட் தர வேண்டி இருக்கிறது.
அதுகூட போகட்டும். ஆனால் ஏ கிரேட் நடிகை, பி கிரேட் நடிகை என்று ஒரு லிஸ்ட் சொல்கிறார்கள். அதுதான் எனக்கு புரியவில்லை. நடிப்பை மட்டுமே நான் உணர்வு பூர்வமாக வெளியிடுகிறேன். மற்ற விஷயங்கள் பற்றி யோசிப்பதுகூட கிடையாது. இவ்வாறு அமலா பால் கூறினார்.