Recent Post

தேசிய கட்சியில் சேரப்போகிறாராம் குஷ்பூ?




Is Kushboo to joint in National Party?
திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள குஷ்பூ கடந்த தேர்தல் வரை சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால், இந்த முறை அவர் கட்சியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை. அநத அளவுக்கு சத்தமே இல்லாமல் இருக்கிறார் நடிகை.

குறிப்பாக, மு.க.ஸ்டாலின் பற்றி அவர் சொன்ன சில கருத்துக்கள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக, திருச்சியில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றபோது குஷ்பூவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் செருப்பை காட்டியும் எச்சரித்தனர்.

அதனால் அதன்பிறகு எந்தவித கருத்தும் சொல்லாமல் மெளனமான குஷ்பூ, பாராளுமன்ற தேர்தல் வருவதால் மீண்டும் பிரசார பீரங்கியாக வெளியே வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக சார்பில் இதுவரை குஷ்பூவுக்கு எந்தவித அழைப்பும் செல்லவில்லையாம்.

இதனால், கட்சி தலைமை அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த குஷ்பூ ஏமாற்றமடைந்துள்ளாராம். அதேசமயம், மாநில கட்சிகளில் இருந்து விடுபட்டு, அடுத்து தேசிய கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளும் யோசனையில் குஷ்பூ இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் பாஜக அல்லது ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக்கொள்ளக் கூடும் என்று பரபரப்பு செய்திகள் அரசியல் வட்டாரங்களில் புகைந்துள்ளன.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)