சிம்புவும்-நயன்தாராவும் இணைந்து நடிப்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இயக்குநரும் நயன்தாராவின் முன்னாள் காதலருமான பிரபுதேவா சிம்புவுடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட காதல் முன்பு முறிந்து போனது. ஆனால், பிரபுதேவாவுடன் நயன்தாராவிற்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. அதனால், மும்பையில் வீடு எடுத்து தங்கியிருந்த பிரபுதேவாவுடன் அவ்வப்போது சென்று காதல் வளர்த்து வந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார். ஆனபோதும், கடைசி நேரத்தில் சிம்புவுடனான காதல் வெடித்து சிதறியது போன்று, கல்யாண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார். இந்த நேரத்தில் இனி யாருடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவே மாட்டார் என்று நினைத்தார்களோ அதே சிம்புவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும இந்த படத்தில், சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் உள்ளதாம். இதுபற்றி பிரபுதேவாவிடம் அவரது நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் சொன்ன பிரபு தேவா கூறியதாவது:

நான் இப்போது மும்பைவாசியாகிவிட்டேன். என் ரூட்டு வேறமாதிரி போயிட்டிருக்கு. தமிழ்நாட்டுல என்ன நடந்துக்கிட்டிருக்குன்னு, தமிழ்நாட்டுல இருக்குறப்பவே கவனிக்க மாட்டேன். இப்போ சுத்தமா இல்லை.

என்னோட கவனம், உழைப்பு சினிமா சினிமாதான். யார் யாரோட நடிக்கிறாங்க. யார் யாரை காதலிக்கிறாங்க என்பது மாதிரியான விஷயங்களை கவனிக்கவே மாட்டேன்.

காலை 7 மணியிலிருந்தே இரவு 1 மணி வரைக்கும் சினிமாவில் உழைக்கிறேன். இதில் மற்ற விஷயங்களை தெரிந்து கொள்ள எனக்கு நேரமில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

சோனாக்ஷி சின்ஹா என் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு தனியான காரணம் எதுவும் இல்லை. என்னோட ஹீரோயின்கள் பக்கா இண்டியன் லுக்கோட இருக்கணும், அதுக்கு சோனாக்ஷி பொருத்தமா இருப்பதால் அவர் நடிக்கிறார்.

சினிமாவில நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்போ கமர்ஷியல் படங்கள்தான் பண்ணிக்கிட்டிருக்கேன். மனசை ஊடுருவுகிற மாதிரி அழுத்தமான கதையோட ஒரு படம் பண்ணணும், அதே நேரத்துல தி லார்ட் ஆப் ரிங்ஸ், ஸ்பைடர் மேன் மாதிரியும் ஒரு படம் பண்ணணும் என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

அதே சமயம் பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிப்பீர்களா? என்று நயன்தாராவிடம் கேட்டதற்கு, சிம்புவையாவது மன்னிக்கலாம், ஆனால் பிரபுதேவாவை மன்னிக்க முடியாது என்று நயன்தாரா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.