Recent Post

ஆர்யா-சிவகார்த்திகேயனின் இரண்டாம் பாகம்!



சமீபகாலமாக வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் படமெடுப்பது தொடர்ந்து வருகிறது. சிங்கம்-2, பீட்சா-2 வில் ஆரம்பித்தது விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என பல படங்களின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா-சந்தானம் ஆகியோர் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம். இந்த படத்திலும் ஆர்யா-நயன்தாரா ஜோடி சேருவதோடு, இன்னொரு நாயகியாக தமன்னாவும் நடிக்கிறாராம். வழக்கம்போல் சந்தானம் இருக்கிறாராம்.

அதேபோல், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா இல்லையாம். மாறாக, ஆண்ட்ரியா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். சூரி, முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகத்திலும் கலக்குகிறாராம். 

இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன், ரஜினி நடித்த எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம்கூட வளர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)