
ஸ்ரீசெல்லாத்தாள் மூவீஸ் சார்பில் லெனின், செல்வகுமார் தயாரிக்கும் படம் வீரத்திருவிழா. இதில் நாயகனாக புதுமுகம் சத்யா, நாயகியாக தேனிகா நடிக்கின்றனர். பொன்வண்ணன், காதல் சுகுமார், பசங்க சிவகுமார், செந்தி, நஜீர், தமிழ் செல்வா, கலை, செல்வம், சிட்டு, சேட்டுபாலா, லெனின் ஆரவாயல் ராமன், கவிதா பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோ.விஜயமுரளிதர் இயக்குகிறார். இவர் டைரக்டர் வி.சேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். நகரத்து மக்களுக்கு எவ்வளவோ பொழுது போக்கு விஷயங்கள் இருக்கிறது. இதில் கிராமத்து மக்களுக்கு உரிய வீரம், கலாச்சாரம், காதல், நட்பு போன்றவற்றை படமாக்கியுள்ளோம் என்றார் இயக்குனர்.
ஒளிப்பதிவு: ஹார்முக், இசை: ஈ.எஸ்.ராம்ராஜ், பாடல்: சினேகன், ஆர்.எம்.இயற்கை அரசன், எடிட்டிங்: சதீஷ்குமார், நடனம்: எஸ்.எல்.பாலாஜி, ஸ்டண்ட்: ஆக்ஷன் பிரகாஷ்.