Recent Post

நான் கண்டிப்பான அம்மா : கஜோல் பேட்டி




1

I am strict mother says Kajol
குழந்தைகள் விஷயத்தில் நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பேன் என்கிறார் பாலிவுட் நடிகை கஜோல். வயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகை கஜோல் பிரசாரம் செய்த வருகிறார். குழந்தைகளுக்கு அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தனது பிரசாரத்தின் முக்கிய அம்சமாக கஜோல் கொண்டுள்ளார். அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை தான் பின்பற்றி வரும் கஜோல், தனது குழந்தைகளுக்கும் அதனை கண்டிப்புடன் பின்பற்றுகிறார்.

நான் மிகவும் கண்டிப்பானவள். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதில் நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பதாக எனது மகள் கூறுகிறாள். கை கழுவும் பழக்கத்தை நான் கண்டிப்புடன் கடைபிடிப்பதால், கண்டிப்புடன் அவர்களுக்கும் பழக்குவதாக நான் அவளிடம் கூறுகிறேன். உங்களுக்கு நல்ல விஷயங்கள் தெரியாது. அதனால் நான் கற்றுக் கொடுக்கிறேன் என்றும் சொல்கிறேன். வாழ்க்கைக்கு அது மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன்; குழந்தைகளுக்கு நாம் தான் நல்ல விஷயங்களை கற்றுத் தர வேண்டும். எனது குழந்தைகள் மிகவும் நம்பிக்கையானவர்கள். என் மகளுக்கு என்னை விட எனது கணவரை மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் என்னை பிடிக்கும். எனது மகன் மிகவும் சின்ன பையன். அதனால் அவனுக்கு யாரை பிடிக்கும் என சரியாக கணிக்க முடியவில்லை.

நான் குழந்தை போன்றவள். ஆனால் என் அம்மாவுடன் இருக்கும் போது தேவதையாக உணர்ந்தேன்; எனது அம்மா தான் எனக்கு எது நல்லது, எது கெட்டது என கற்றுக் கொடுத்தார். அதை போல் நானும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கஜோல் இதனை கூறினார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)