சிவகார்த்திகேயனின் மான்கராத்தே இன்னும் சில வாரங்களில் ரிலீசாக இருக்கிறது. பத்திரிகையாளர் ரீச் பண்ண முடியாத நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இதனால் பத்திரிகையாளர்கள் சிவகார்த்திகேயன் மீது செம காண்டில் இருந்தார்கள். அவர்களை கூல்பண்ணுவதற்காக திடீரென்னு ஒரு பத்திரிகையாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆடியோ சக்சஸ் மீட் என்று அதற்கு பெயரும் வைத்தார்.
"மான் கராத்தே என்றால் எதிரி தாக்கும்போது மான் கராத்தே என்று சொல்லி அவர்களை திணறடித்துவிட்டு மான்போல ஓடிவிடுவது" என்று மான்கராத்தே டைட்டிலுக்கு விளக்கம் சொன்னார் இயக்குனர் திருமுருகன். அதேபோன்று இருந்தது சிவகார்த்திகேயனின் பதில்களும். அந்த கேள்வி பதில்களில் சில...
*உங்களுடன் நடித்த ஹன்சிகாவின் காதல் தோல்வி அடைந்து விட்டதே அவருக்கு ஆறுதல் சொன்னீங்களா?
என்னது ஹன்சிகா காதல் பெயிலியர் ஆயிடுச்சா. எனக்குத் தெரியாதே? அப்படி இருந்தா அது அவுங்க பர்சனல் விஷயம் அதுல நான் தலையிட முடியமா?
*மான்கராத்தே ஆடியோ பங்ஷன்ல ரஜினி பங்கஷனை விட அதிக கெடுபிடி இருந்ததே?
அந்த பங்ஷனை நான் ஏற்பாடு பண்ணலை.
*யார் பண்ணினாங்க?
வழக்கமா ஆடியோ பங்ஷனை யார் பண்ணுவாங்களோ அவுங்க பண்ணினாங்க.
*எப்பவும் பவுன்சர்கள் பாதுகாப்போடு இருக்கீங்களாமே?
அப்படித்தான் நியூஸ் வருது. 50 பவுன்சர்களை வச்சிருக்கிறதா நியூஸ் வருது. தலைக்கு 2 ஆயிரம் பேட்டா கொடுதாக்கூட லட்சத்துக்கு மேல வருமே அந்த அளவுக்கு நான் வசதியானவன் இல்லை. அதோடு நான் கந்து வட்டி தொழிலோ, கட்டப் பஞ்சாயத்தோ நடத்வில்லை. சினிமாலதான் நடிக்கிறேன்.
*அடுத்து உங்ககூட நயன்தாரா, காஜல் அகர்வால் ஜோடியா நடிக்க போறதா சொல்றாங்களே?
நடிச்சா சந்தோஷம்தான். ஆனா இவுங்கள ஹீரோயினா போடுங்கன்னு சொல்ற அளவுக்கு நான் பெரிய ஹீரோ கிடையாது. யார்கூட வேணாலும் நான் நடிப்பேன்.
*உங்க படங்கள்ல கட்டாயம் டாஸ்மாக் பாடல் வருதே. உங்களுக்கு குழந்தைகள்கூட ரசிகர்களாக இருக்காங்க. இதை தவிர்க்கலாமே?
கதையில தலையிடுற அளவுக்கும் நான் பெரிய நடிகர் இல்லை. இப்போ நான் வீட்டுக்கு அடங்காத பையன் உருப்படாத பையன் கேரக்டர்லதான் நடிக்க முடியும். வித்தியாசமான முயற்சிகளை பின்னாடி பார்க்கலாம்.
*எந்த நடிகையாது உங்களை அப்ரோச் பண்ணியிருக்காங்களா?
(அதிர்ச்சியுடன்) என்னது அப்ரோச்சா எதுக்கு. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. எனக்கு கல்யாணம் ஆகி மனைவி குழந்தைங்க குடும்பம்னு சந்தோஷமா இருக்கேன். இதுவே எனக்கு போதும்.