ஜெயம் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜா. அப்படத்தில் கதாநாயகனாக அவரது தம்பி ரவி நடித்தார். அப்படம் ஹிட்டானதையடுத்து, அவர்கள் இரண்டு பேரின் பெயருக்கு முன்பு ஜெயம் ஒட்டிக்கொண்டது. அதற்கேற்ப, அதையடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களாகவே கொடுத்து வந்தனர்.
ஆனால், அப்படி ஜெயம் ராஜா இயக்கியதில் பல படங்கள் மற்ற மொழிகளில் ஹிட்டடித்த படங்களின் ரீமேக்காகவே இருந்தன. அதனால் அவரை ஜெயம்ராஜா என்று சொல்வதை விடுத்து ரீமேக் ராஜா என்று சொல்லத்தொடங்கினர். அதோடு, சிலர் அவருக்கு சொந்தமாக கதை பண்ணத் தெரியாது என்றும் கூறத் தொடங்கினர்.
இதனால் டென்சன் ஆகி விட்டார் ராஜா. அதனால் விஜய் நடித்த வேலாயுதம் படத்திற்கு பிறகு ஒரு கதையை தனது சொந்த கற்பனையிலேயே தயார் செய்து வந்தவர், அதற்கு தனி ஒருவன் என்று பெயர் வைத்து தற்போது தனது தம்பி ஜெயம்ரவியை வைத்தே இயக்கிக்கொண்டிருக்கிறார்.
ஜெயம்ரவி-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்துள்ள இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகி வருகிறது என்று சொல்லும் ஜெயம்ராஜா, இந்த கதையையும் ரீமேக் என்று மற்றவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக, இது என் சொந்த கதையில் உருவாகிறது,. இமேலும் இதே ரூட்டை தொடர்வேன் எனறும் கூறி வருகிறார்.