வீரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தமன்னாவுக்கு படம் இல்லை. இருப்பினும், தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் பாகுபாலி படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் சிறிய கேரக்டருக்கு ஒப்பந்தமான தமன்னாவின் பர்பாமென்ஸ் தூக்கலாக இருந்ததால் பின்னர் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி அனுஷ்காவுக்கு இணையாக மாற்றி விட்டார் டைரக்டர்.
இதனால், இப்படம் தெலுங்கில் தனக்கு அடுத்தடுத்து புதிய படங்களுக்கு வழிவகுக்கும் என்று உற்சாகத்துடன் நடித்து வரும் தமன்னாவுக்கு தாய்மொழியான இந்தியிலும் தற்போது இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. அதனால் 10 வருடங்களுக்கு பிறகு இந்தி சினிமா தனக்கு கைகொடுத்திருப்பதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன்காரணமாக அவர் அடிக்கடி சென்னை பக்கம் வருவதை குறைத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து சில நெருக்கமான நடிகர்கள் அவருக்கு போன் போட்டு விசாரித்தபோது, இந்தியில் ஒரே நேரத்தில் இரண்டு இந்தி படங்களில் நடிப்பதால் கோலிவுட்டுக்கு வர நேரமில்லை என்று சொன்ன தமன்னா, எத்தனை மொழிகளில் பிசியாக நடித்தாலும் நான் தமிழ்நாட்டையும், தமிழ் ரசிகர்களையும் மட்டும் மறக்கவே மாட்டேன் என்றாராம்.
காரணம், நடிகைகளை தெய்வமாக மதித்து அவர்களுக்கு கோயில் கட்டும் ரசிகர்கள் இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதனால் அப்படிப்பட்ட ஊரையும், மக்களையும் நான் மறப்பேனா என்று கூறிய தமன்னா, படப்பிடிப்புக்கு கொஞ்சம் ப்ரேக் ஆனதும் கண்டிப்பாக சென்னை வருவேன் என்று கூறியுள்ளாராம்.