
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் காதல் என கிசு கிசுக்கள் பரவி வருகின்றன. இது குறித்து சமந்தாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
என் சொந்த விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேச விரும்பவில்லை. நான் காதலிப்பது உண்மைதான். ஆனால் யார் என்று சொல்ல மாட்டேன். தெலுங்கு டைரக்டர் திரிவிக்ரம், சித்தார்த் இருவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள். திருமணம் உடனடியாக செய்து கொள்ள மாட்டேன். நான்கு வருடங்கள் கழித்தே என் திருமணம் நடக்கும். எனக்கு குழந்தைகளை பிடிக்கும். அதற்காகவே திருமணம் செய்வேன்.
நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவள். என் குடும்பம் சாதாரணமானது. இந்த பெயர், புகழ் எல்லாமே கடவுள் கொடுத்தது. இதை ஒரு போதும் மறுக்க மாட்டேன். தோல் வியாதி வந்த போது எனக்கு தெரியாதவர்களெல்லாம் உதவி செய்தார்கள். சமூகத்துக்கு நிச்சயம் ஏதேனும் ஒருவகையில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
இவ்வாறு சமந்தா கூறினார்.