Recent Post

படவாய்ப்புகள் பறிப்பு: சந்தானம், சூரி மோதல்



காமெடியர்கள் சந்தானம், பரோட்டா சூரி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொழில் போட்டியில் முட்டிக் கொண்டு நிற்கிறார்களாம்.
வடிவேலுக்கு ஏற்பட்ட திடீர் சறுக்கலால் முன்னணிக்கு வந்தவர் சந்தானம். இவரது கவுண்டமணி பாணி காமெடிகள் ரசிகர்களை கவர்ந்தன.
அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் பெரிய ஹீரோக்கள் போட்டி போட்டு தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்தனர்.
இதனால் சம்பளத்தை கதாநாயகர்கள் அளவுக்கு உயர்த்தினார். ஒரு நாள் சம்பளமாக பல லட்சங்கள் வாங்குகிறார். இவரது கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.
இந்த இடைவெளியில் பரோட்டா சூரி மளமளவென உயர்ந்தார். சந்தானம் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாத தயாரிப்பாளர்கள் பலர் அவருக்கு பதில் பரோட்டா சூரியை ஒப்பந்தம் செய்தனர்.
சந்தானம் நடிப்பதாக இருந்த பல படங்கள் சூரி கைக்கு மாறின. தனது படங்களை சூரி பறிப்பது சந்தானத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அத்துடன் சூரி வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் 50 பரோட்டாக்களை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பரோட்டா சூரி என பெயர் பெற்றார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்து நில் என அவர் நடித்த பல படங்கள் ஹிட்டானதால் சந்தானத்துக்கு போட்டியாக உயர்ந்தார். சூரி வளர்ச்சி சந்தானத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)