Recent Post

போதை பொருள் கடத்தல்: தெலுங்கு நடிகர் உதய்கிரண் கைது



போதை பொருள் கடத்தல்: தெலுங்கு நடிகர் உதய்கிரண் கைது
போதை பொருள் கடத்தலில் தெலுங்கு நடிகர் நந்தூரி உதய்கிரண் போலீசில் சிக்கினார். அவருக்கு போதை பொருளை சப்ளை செய்த நைஜீரிய இளைஞனும் பிடிபட்டார்.

தெலுங்கு பட உலகை சேர்ந்தவர்கள் பலர் போதை பொருள் கடத்தலில் கைதாவது தொடர்ந்து நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ரவி தேஜா சகோதரர்கள் ரகுநாத ராஜூ, பரத்ராஜூ ஆகியோர் ‘கோகைன்’ போதை பொருள் வாங்கும்போது போலீசாரிடம் மாட்டினார்கள்.

சினிமா துறையை சேர்ந்த மேலும் பலருக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சோதனைகளும் நடந்தன.

இதில் நந்தூரி உதய்கிரண் சிக்கியுள்ளார். ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நைஜீரியா இளைஞனிடம் நடிகர் நந்தூரி உதய்கிரண் ‘கோகைன்’ போதை பொருளை வாங்கிக் கொண்டு இருந்தார். அவர்களை போலீசார் பாய்ந்து சென்று பிடித்து கைது செய்தார்கள்.

கைதான நைஜீரிய வாலிபர் பெயர் ரோடிமி ஒலுசோலா வயது 29. இவர் டெல்லியில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்த ஐதராபாத் நகரில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

நந்தூரி உதய்கிரண் தெலுங்கில் ‘பரேரே’, ரக்சகுலு, யுவராஜ்யம், ‘பேஸ்புக்’ போன்ற படங் களில் நடித்துள்ளார். இருவரிடம் இருந்து 15 கிராம் போதை பொருள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த கடத்தலில் வேறு நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடக்கிறது என கூடுதல் போலீஸ் டி.ஜி.லிம்பா ரெட்டி தெரிவித்தார். ஹக்கீம் என்ற பிரபல போதை பொருள் கடத்தல்காரனிடம் இருந்து நைஜீரிய இளைஞன் வாங்கி ஐதராபாத்தில் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)